‘நாய் சேகர்’ படக்குழுவினருடன் தனது பிறந்த நாளை கொண்டாடிய வடிவேலு… வைரலாகும் வீடியோ!

‘காமெடி’ என்று சொன்னாலே வடிவேலுவின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் வடிவேலு பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.

இயக்குநர் சுராஜ் இயக்கிய ‘தலைநகரம்’ படத்தில் ‘நாய் சேகர்’, ‘மருதமலை’ படத்தில் ‘என்கவுண்டர் ஏகாம்பரம்’, ‘கத்தி சண்டை’ படத்தில் ‘டாக்டர் பூத்ரி’ போன்ற கதாபாத்திரங்களில் வலம் வந்து நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருந்தார் ‘வைகைப்புயல்’ வடிவேலு. சமீபத்தில், புதிய காமெடி படத்துக்காக நடிகர் வடிவேலுவும் – இயக்குநர் சுராஜும் மீண்டும் கூட்டணி அமைக்கப்போகின்றனர் என்று தகவல் வந்தது.

இந்த தகவலை நடிகர் வடிவேலுவும், இயக்குநர் சுராஜுமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். ‘நாய் சேகர்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 12-ஆம் தேதி) வடிவேலு தனது பிறந்த நாளை முன்னிட்டு ‘நாய் சேகர்’ படக்குழுவினருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியபோது எடுக்கப்பட்ட ஸ்டில் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.


Share.