‘கொரோனா’ தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி வழங்கிய ‘வைகைபுயல்’ வடிவேலு!

‘காமெடி’ என்று சொன்னாலே வடிவேலுவின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் வடிவேலு பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.

இந்நிலையில், இன்று (ஜூலை 14-ஆம் தேதி) நடிகர் வடிவேலு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது, கொரோனா தடுப்பு பணிகளுக்காக வடிவேலு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினாராம்.

சமீபத்தில், நடிகர் வடிவேலுவும் – இயக்குநர் சுராஜும் மீண்டும் கூட்டணி அமைக்கப்போகின்றனர் என்று கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது. இந்த படத்துக்கு ‘நாய் சேகர்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டது. மிக விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.