Vadivelu & Cyclone Michaung : ‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு… முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக 6 லட்சம் வழங்கிய வடிவேலு!

  • December 15, 2023 / 05:55 PM IST

‘காமெடி’ என்று சொன்னாலே வடிவேலுவின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் வடிவேலு பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.

சமீபத்தில், வடிவேலு மிக முக்கிய ரோலில் நடித்த ‘மாமன்னன்’ மற்றும் ‘சந்திரமுகி 2’ ஆகிய 2 திரைப்படங்கள் வெளியானது. தற்போது, வடிவேலு குறித்து நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் “மிக்ஜாம் புயல் மற்றும் கன மழையால் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க, கழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இந்த சூழலில், அரசின் மீட்பு – நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் வகையில், ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதி’-க்கு திரைக்கலைஞர் அண்ணன் வடிவேலு அவர்கள் ரூ.6 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்” என்று பதிவிட்டுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus