Vijay, Vadivelu & Tamilaga Vettri Kazhagam : ‘தளபதி’ விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து பேசிய வடிவேலு… வைரலாகும் வீடியோ!

  • February 8, 2024 / 12:23 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘லியோ’ கடந்த ஆண்டு (2023) அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’-ஐ (The Greatest of all Time) பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இயக்குகிறார். இதில் விஜய் டபுள் ஆக்ஷனில் வலம் வரப்போகிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி விஜய் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் “‘தமிழக வெற்றி கழகம்’ என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. வரும் 2026 சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு” என்று கூறியிருந்தார்.

தற்போது, பிரபல காமெடி நடிகர் வடிவேலுவிடம் இது பற்றி கேட்கையில் “மக்களுக்கு நல்லது செய்வதற்கு யார் வேண்டுமானாலும் வரலாம். யாரும் வரக்கூடாதுன்னு சொல்லக் கூடாதுல. அரசியலுக்கு நடிகர்களான டி.ராஜேந்தர் வந்தாரு, ராமராஜன் வந்தாரு, பாக்யராஜ் வந்தாரு. எல்லாரும் நல்லது செய்யத் தான வந்தோம். அதுமாதிரி எல்லாரும் நல்லது செய்ய வர்றாங்க. அப்படி வருவோர்களை வந்து வரவேற்கணும். வரட்டும்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus