‘காமெடி’ என்று சொன்னாலே வடிவேலுவின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் வடிவேலு பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.
சமீபத்தில், புதிய காமெடி படத்துக்காக நடிகர் வடிவேலுவும் – இயக்குநர் சுராஜும் மீண்டும் கூட்டணி அமைக்கப்போகின்றனர் என்றும், இதற்கு ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என டைட்டில் சூட்டப்பட்டிருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறாராம்.
கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இன்று (டிசம்பர் 10-ஆம் தேதி) படத்தின் மோஷன் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த மோஷன் போஸ்டர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது.
Here is the Motion Poster of 'Vaigaipuyal' #Vadivelu in #NaaiSekarReturns
Original https://t.co/ZAFRDwiy2W@Director_suraaj @Music_Santhosh @UmeshJKumar @dharmachandru @Yuvrajganesan @proyuvraaj @teamaimpr @EditorSelva pic.twitter.com/8z4euj15Gu
— Lyca Productions (@LycaProductions) December 10, 2021