வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!
December 9, 2022 / 11:15 PM IST
|Follow Us
காமெடி’ என்று சொன்னாலே வடிவேலுவின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் வடிவேலு பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.
வடிவேலு ஹீரோவாக நடித்துள்ள புதிய காமெடி படமான ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ இன்று (டிசம்பர் 9-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சுராஜ் இயக்கியுள்ளார்.
இதில் முக்கிய ரோல்களில் ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி, முனிஷ்காந்த், ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி, ஷிவானி நாராயணன், ராவ் ரமேஷ், பிரஷாந்த், மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்துள்ளார், செல்வா ஆர்.கே படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது, இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
Vadivel as comedian era is over but vadivel as an actor still there hope directors uses him for good roles instead of just forced comedy roles #NaaiSekarReturns
#NaaiSekarReturns : Vaigai Puyal #Vadivelu is back! As dog Kidnapper, he does lots of kidnappings.. 2nd half takes a different turn..Most situations arehilarious.After#Vadivelu,#Anandraj is acting is good #Redin and @itisprashanth are good..For family audience/Kids! Must watch.