விஜயகாந்தின் ‘சின்னக் கவுண்டர்’ல் நடித்தபோது வடிவேலுவின் ஒரு நாள் சம்பளம் எவ்ளோ தெரியுமா?

  • March 23, 2023 / 12:54 PM IST

‘காமெடி’ என்று சொன்னாலே வடிவேலுவின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் வடிவேலு பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.

வடிவேலு நடிப்பில் 1992-ஆம் ஆண்டு வெளியான படம் ‘சின்னக் கவுண்டர்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஆர்.வி.உதயகுமார் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ‘புரட்சிக் கலைஞர்’ விஜயகாந்த் நடித்திருந்தார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் சுகன்யா, கவுண்டமணி, செந்தில், மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது, இந்த படத்தில் நடித்தபோது வடிவேலுவின் ஒரு நாள் சம்பளம் 250 ரூபாய் என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus