பிரபல OTT தளத்தில் ஆரம்பமாகும் புதிய நிகழ்ச்சிக்காக ஒப்பந்தமான வடிவேலு… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

  • August 7, 2021 / 07:15 PM IST

‘காமெடி’ என்று சொன்னாலே வடிவேலுவின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் வடிவேலு பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.

சமீபத்தில், நடிகர் வடிவேலுவும் – இயக்குநர் சுராஜும் மீண்டும் கூட்டணி அமைக்கப்போகின்றனர் என்று கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது. இந்த படத்துக்கு ‘நாய் சேகர்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டது. மிக விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ‘ஆஹா’ என்ற பிரபல OTT தளத்தில் ஒரு அசத்தலான காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் வடிவேலு ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தெலுங்கில் பாப்புலரான ‘ஆஹா’ OTT தளத்துக்கென தமிழில் தனியாக ஒரு சேனல் மிக விரைவில் ஆரம்பமாகப்போவது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus