நடிகர் , தயாரிப்பாளர் , அரசியல்வாதி என தன்னை பல துறைகளில் ஈடுபடுத்திக் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின் . 2008 ஆம் ஆண்டு முதன் முதலாக ரெட் ஜெயிண்ட் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர். அந்த மூலம் குருவி , ஆதவன், மன்மதன் அம்பு , 7ஆம் அறிவு உள்ளிட்ட படங்களை தயாரித்தார் .
அதன் பிறகு 2012-ஆம் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி என்கிற படம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் . இந்த படத்தில் சந்தானத்துடன் இவர் இணைந்து செய்த நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . அதன் பிறகு இது கதிர்வேலன் காதல் , நண்பேன்டா ஆகிய படங்களில் நடித்து இருந்தார் .ஆனால் அந்த படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை . மனிதன் மற்றும் சைக்கோ ஆகிய இரண்டு படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன .
இந்நிலையில் நெஞ்சுக்கு நீதி என்கிற படம் இவர் நடிப்பில் வெளியாகி இருந்தது . இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி இருந்தார் . இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் உதயநிதி இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்துள்ள கலகத்தலைவன் படம் நவம்பர் 18 -ஆம் தேதி வெளியாக உள்ளது .
மாரிசெல்வராஜ் இயக்கி வரும் மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது . இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து இருக்கும் வடிவேலு சம்பளமாக 1 கோடி ரூபாய் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .