வைபவ் ஹீரோவாக நடித்த ‘ரணம்’ மற்றும் சஷீஷ் ஹீரோவாக நடித்த ‘வித்தைக்காரன்’ ஆகிய இரண்டு படங்களும் கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் ‘ரணம்’ படத்தை இயக்குநர் ஷெரிஃப் இயக்கியுள்ளார்.
இது வைபவ்வின் கேரியரில் 25-வது படமாம். இதில் மிக முக்கிய ரோல்களில் நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு அரோல் கொரெல்லி இசையமைத்துள்ளார், பாலாஜி.கே.ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார், முனீஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘மிதுன் மித்ரா புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
‘வித்தைக்காரன்’ படத்தை இயக்குநர் வெங்கி இயக்கியுள்ளார். இதில் சதீஷுக்கு ஜோடியாக சிம்ரன் குப்தா நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ஆனந்தராஜ், ஜான் விஜய், மதுசூதனன், சுப்ரமணியம் சிவா மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு VBR இசையமைத்துள்ளார், யுவா கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார், அருள் இளங்கோ சித்தார்த் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘White Carpet பிலிம்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
தற்போது, இவ்விரு படங்களும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 4 நாட்களில் ‘ரணம்’ தமிழ்நாட்டில் மட்டும் ரூ.1.35 கோடியும், ‘வித்தைக்காரன்’ தமிழ்நாட்டில் மட்டும் ரூ.1.05 கோடியும் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.