‘கொரோனா’ தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி வழங்கிய ‘கவிப்பேரரசு’ வைரமுத்து!
May 15, 2021 / 01:22 PM IST
|Follow Us
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 11-ஆம் தேதி அவரது ட்விட்டர் பக்கத்தில் “#COVIDSecondWave-க்கு எதிரான போரில் நாம் அனைவரும் சேர்ந்து போரிட வேண்டிய நேரம் இது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிடுவீர்! பேரிடர் காலத்தில் பெறப்படும் நிதி கொரோனா தடுப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
நன்கொடை – செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும்” என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர்கள் சிவக்குமார் – சூர்யா – கார்த்தி ரூ.1 கோடியும், நடிகர் ‘தல’ அஜித் ரூ.25 லட்சமும், நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் ரூ.25 லட்சமும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ரூ.25 லட்சமும் வழங்கியிருந்தனர்.
தற்போது, பிரபல பாடலாசிரியர் ‘கவிப்பேரரசு’ வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம் வழங்கினேன். மனம்விட்டு உரையாடினோம். முதலமைச்சர் பண்பாட்டில் பழுத்திருக்கிறார். நல்லாட்சி குறித்தே கனவு காண்கிறார். செயல் குறித்தே திட்டமிடுகிறார். நாடுகாக்கத் துடிக்கும் நல்லவரை வாழ்த்தினேன்” என்று கூறியுள்ளார்.
முதலமைச்சர்
மு.க.ஸ்டாலினைச் சந்தித்து
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு
ரூபாய் 5லட்சம் வழங்கினேன்.
மனம்விட்டு உரையாடினோம்.
முதலமைச்சர் பண்பாட்டில் பழுத்திருக்கிறார்;
நல்லாட்சி குறித்தே கனவு காண்கிறார்;
செயல் குறித்தே திட்டமிடுகிறார்;
நாடுகாக்கத் துடிக்கும்
நல்லவரை வாழ்த்தினேன். pic.twitter.com/rdyV4oxw1J