ஒரே கவிதையில் மூன்று பிரச்சனைகளை பற்றி பேசிய வைரமுத்து!

  • July 18, 2020 / 09:47 PM IST

தமிழகத்தில் தற்போது கொரோனா கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில், இதைத் தவிர வேறு சில பிரச்சனைகளும் தலைதூக்கியுள்ளது.

சமீபத்தில் சிபிஎஸ்இ பாடத் திட்டங்களில் இருந்து திருக்குறள் நீக்கப்பட வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளது, பெரும் சர்ச்சையை தமிழ் ஆர்வலர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. ராணுவ வீரர்களிடத்தில் பேசும்பொழுது திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசும் பிரதமர் ஏன் பாடத்திட்டத்திலிருந்து திருக்குறளை நீக்கவேண்டும் போன்ற கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

அதுமட்டுமின்றி சமீபத்தில் முருகன் கந்த சஷ்டி கவசத்தை பற்றி அவதூறாக பேசிய கருப்பர் கூட்டத்தின் மீது பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த பிரச்சினை பற்றி சில முக்கிய தலைவர்களை தவிர அனைத்து அரசியல்வாதிகளும் சினிமா பிரபலங்களும் இந்த பிரச்சனையை பற்றி பேசி வருகிறார்கள்.

அதுமட்டுமின்றி தந்தை பெரியாரின் சிலைக்கு அவமதிப்பு நடந்துள்ளது. இது தமிழ் நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கருப்பர் கூட்டம் பிரச்சினையைப் பற்றி பேசாத அரசியல் தலைவர்கள் கூட பெரியார் சிலையின் அவமதிப்பு பிரச்சினையை பற்றி பேசி வருகிறார்கள். மேலும் பல திரை பிரபலங்களும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த வகையில் கவிப்பேரரசு வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த மூன்று பிரச்சினையை உள்ளடக்கிய ஒரு கவிதையை வெளியிட்டுள்ளார் இது தற்போது வைரலாகி வருகிறது.

வைரமுத்து ” திருக்குறள் மேற்கோள் காட்டப்படுவதை பாராட்டும் எங்களால் திருக்குறள் நீக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.பெரியார் இழிவு செய்யப்படுவதை சகிக்கமுடியாத எங்களால் முருகன் அடியார்கள் காயப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.

இவ்வாறு மூன்று பெரிய பிரச்சினைகளையும் ஒரே கவிதையில் உள்ளடக்கிய வைரமுத்துவை பாராட்டி பலரும் இந்த கவிதையை வைரலாக்கி வருகிறார்கள்.
Attachments area

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus