சென்னை நடராசன், கும்பகோணம் தாளமுத்து, சிவகங்கை ராஜேந்திரன், மயிலாடுதுறை சாரங்கபாணி என பலர், இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியைக்காக்கவும் தங்களது உயிர்களை தியாகம் செய்து உள்ளனர் .
இந்நிலையில் அவர்களின் நினைவை போற்றும் விதமாக மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், மொழிப்போர் வீரர்களை நெற்றி நிலம்பட வணங்குகிறோம்.
கண்ணகிமதுரையில் இட்ட நெருப்புக்குப் பிறகு தமிழ்நாட்டைச் சுட்டது தமிழுக்காக எங்கள் மறவர்கள் தேகத்தில் மூட்டிக்கொண்ட தீ தான் தேகங்கள் அணைந்துவிட்டன. தீ அப்படியே செந்தீயைத் தீண்டாதே தள்ளி நில் இந்தியே…! என பதிவிட்டுள்ளார்.
மொழிப்போர் வீரர்களை
நெற்றி நிலம்பட
வணங்குகிறோம்கண்ணகி
மதுரையில் இட்ட
நெருப்புக்குப் பிறகு
தமிழ்நாட்டைச் சுட்டது
தமிழுக்காக
எங்கள் மறவர்கள்
தேகத்தில்
மூட்டிக்கொண்ட தீ தான்தேகங்கள்
அணைந்துவிட்டன
தீ அப்படியேசெந்தீயைத் தீண்டாதே
தள்ளிநில் இந்தியே#தமிழ் | #தமிழ்நாடு— வைரமுத்து (@Vairamuthu) January 25, 2023