‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி எந்த இயக்குநருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பின், இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் தான் ரஜினி நடிக்கப்போகிறார் என்று உறுதிசெய்யப்பட்டது. இந்த படத்தை தயாரிப்பது ‘சன் பிக்சர்ஸ்’ என்பதால், படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரஜினியின் ‘முத்து’ பட வசனம் போல் எப்போ வரும்னு சொல்லாம, வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வந்தது.
படத்தின் டைட்டிலே ‘அண்ணாத்த’ என்று திடீரென அறிவித்து விட்டார்கள். மேலும், படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா என ஹீரோயின்கள் பட்டாளமே நடிக்கிறது. இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வந்தது. பின், ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது, திரையரங்குகளும் மூடப்பட்டது. இந்நிலையில், ரஜினி திரையுலகில் அறிமுகமாகி 45 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு ஒரு ஸ்பெஷல் common dp-யை பல பிரபலங்கள் ட்விட்டரில் வெளியிட்டனர்.
தற்போது, இது தொடர்பாக பிரபல பாடலாசிரியர் ‘கவிப்பேரரசு’ வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் “நகலெடுக்க முடியாத உடல்மொழி.. சூரியச் சுறுசுறுப்பு.. கிழவி குழவியென வசப்படுத்தும் வசீகரம்.. 45 ஆண்டுகளாய் மக்கள் வைத்த உயரத்தைத் தக்கவைத்த தந்திரம்.. இரண்டுமணி நேரத் தனிமைப் பேச்சிலும் அரசியலுக்குப் பிடிகொடுக்காத பிடிவாதம். இவையெல்லாம் ரஜினி; வியப்பின் கலைக்குறியீடு!” என்று பதிவிட்டுள்ளார்.
நகலெடுக்க முடியாத
உடல்மொழிசூரியச் சுறுசுறுப்பு
கிழவி குழவியென
வசப்படுத்தும் வசீகரம்45 ஆண்டுகளாய்
மக்கள் வைத்த உயரத்தைத்
தக்கவைத்த தந்திரம்இரண்டுமணி நேரத்
தனிமைப் பேச்சிலும்
அரசியலுக்குப்
பிடிகொடுக்காத பிடிவாதம்இவையெல்லாம் ரஜினி;
வியப்பின் கலைக்குறியீடு!@rajinikanth— வைரமுத்து (@Vairamuthu) August 10, 2020