கவிஞர் வைரமுத்து தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்லாது தமிழ் மொழியிலும் பல உன்னதமான படைப்புகளை கொடுத்தவர். கதை, கவிதை, கட்டுரை, பாடல் வரிகள் என இவரின் கலைத்துவம், கவித்துவம் என்றுமே பாராட்டுக்குரியதாகவே அமைந்திருந்தது.
இவர் சமீபத்தில் #metoo சர்ச்சையில் சிக்கி பரபரப்பாக பேசப்பட்டார். அன்று முதலே இவரைப்பற்றிய மீம்ஸ்களும், காமெடியான பதிவுகளும், விமர்சனங்களும் அதிகமாக இணையதளத்தில் வைரலாகி வந்தது.
சமீபத்தில் இவரை பற்றிய விமர்சனங்கள் அதிகரித்துவரும் நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது கவியரசர் வைரமுத்து ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தன்னை பற்றிய வீண் வினாக்களை எழுப்புவது தேவையில்லாத வேலை என்றும், அனைவரும் போய் வேலையை பாருங்கள் என்றும், நாட்டில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் பலது உள்ளது என்றும் கூறியுள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ளதாவது “நாட்டின் உயிரும் பொருளும் மானமும் அறிவும் இன்னற்படும் இந்த எரிபொழுதில் நான் கவிஞனா பாடலாசிரியனா நாவலாசிரியனா நாவலனா என்று சிலர் வினாவெழுப்புவது வீண். நீங்கள் நினைக்கும் இடத்தில் நானில்லை. நான் வெறும் மொழியாளன். வேலையைப் பாருங்கள்; மனிதவளத்தை மனவளத்தை மாண்புறுத்துங்கள்”.
நாட்டின் உயிரும் பொருளும் மானமும் அறிவும் இன்னற்படும் இந்த எரிபொழுதில் நான் கவிஞனா பாடலாசிரியனா நாவலாசிரியனா நாவலனா என்று சிலர் வினாவெழுப்புவது வீண். நீங்கள் நினைக்கும் இடத்தில் நானில்லை. நான் வெறும் மொழியாளன். வேலையைப் பாருங்கள்; மனிதவளத்தை மனவளத்தை மாண்புறுத்துங்கள்.