‘வலிமை’ பட ஹீரோயின் ஹூமா குரேஷியின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ!
July 28, 2023 / 03:24 PM IST
|Follow Us
பாலிவுட் சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஹூமா குரேஷி. இவர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் என்ட்ரியானார். இந்த படத்தை இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ‘வலிமை’ என்ற தமிழ் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். ஹூமா குரேஷி ஹிந்தி, தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மராத்தி, மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
இப்போது இவர் நடிப்பில் இரண்டு ஹிந்தி படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இன்று (ஜூலை 28-ஆம் தேதி) நடிகை ஹூமா குரேஷியின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது, இவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோஸ் மற்றும் ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.