பாலிவுட் சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஹூமா குரேஷி. இவர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் என்ட்ரியானார். இந்த படத்தை இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ‘வலிமை’ என்ற தமிழ் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். ஹூமா குரேஷி ஹிந்தி, தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மராத்தி, மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
இப்போது ஹூமா குரேஷி நடிப்பில் இரண்டு ஹிந்தி படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் ஹாட்டான ஸ்டில்ஸ் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் மற்றும் வீடியோ ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.