மே 1-ஆம் தேதி சொன்னபடி ‘வலிமை’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸாகுமா?… போனி கபூர் வெளியிட்ட அறிக்கை!

  • April 24, 2021 / 03:45 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’.

இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம். ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறாராம். இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இதன் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற மே 1-ஆம் தேதி அஜித்தின் பர்த்டே ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டிருந்தனர். தற்போது, படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “எங்கள் நிறுவனத்தின் சார்பில் நாங்கள் கொடுத்த முந்தைய அறிக்கையில் வருகின்ற மே 1-ஆம் தேதி நடிகர் அஜித் குமார் அவர்களின் 50-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நடிப்பில், வினோத் இயக்கத்தில், எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவதாக அறிவித்து இருந்தோம்.

அந்த அறிவிப்பு வெளிவரும் போது, கொரோனா நோயின் இரண்டாவது அலை வரும் என்றோ, அதன் தாக்கம் சுனாமி போல தாக்கும் என்றோ சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இந்த தருணத்தில் தேசமெங்கும் எண்ணற்றோர் பொருளாதாரம் இழந்து, உற்றார் உறவினர் உயிர் இழந்து, நோய் பற்றிய பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்து இருக்கின்றனர்.

இத்தகைய அசாதாரண சூழ்நிலையில் ஜீ ஸ்டூடியோஸ், பே வியூ ப்ரொஜெக்ட்ஸ், இப்படத்தில் நடித்து உள்ள கலைஞர்கள், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எடுத்து உள்ள முடிவின் படி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு மற்றுமொரு தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து அனைவரின் நலத்துக்காகவும், பாதுகாப்புக்காகவும் பிரார்த்திப்போம்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus