வலிமை படத்தின் ரிலீஸ் குறித்து போனி கபூர் – அறிக்கை

  • June 28, 2020 / 05:28 AM IST

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான தல அஜித் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “வலிமை”. இந்த திரைப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அடுத்த வருடம் ஜனவரி மாதம் வெளியாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட இந்தப்படம் OTTயில்வெளிவரும் என்று ஒரு செய்தி பரவியது.

ஆனால் இந்த திரைப்படம் கண்டிப்பாக திரையரங்குகளில் மட்டுமே வெளியிடப்படும் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த படம் எப்போது வெளிவரும் என்று எழுப்பிய கேள்விக்கு தற்போது தனது அறிக்கையில் போனிகபூர் பதிலளித்திருக்கிறார்.

40 முதல் 50 சதவீத படப்பிடிப்புகள் ஏற்கனவே இந்த படத்தில் முடிந்துவிட்டதாகவும், மீதமுள்ள வேலைகளை லாக்டவுன் முழுவதுமாக முடிந்த பிறகே தொடங்க வேண்டும் என்று நடிகர் அஜித் கூறிவிட்டார் என்று திரைப்படவட்டாரம் தெரிவிக்கிறது.

அதனால் இதைப் பற்றி போனிகபூர் “வலிமை படத்தின் மீதமுள்ள படப்பிடிப்புகள் வருகிற பொங்கலுக்கு பிறகு தொடங்கும். அதனால் கண்டிப்பாக அடுத்த 2021 தீபாவளி அன்று இந்த திரைப்படம் வெளியாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் “தளபதி65” படமும் 2021 தீபாவளி அன்று வெளியாகும் என்று அந்த படத்தின் திரைப்படக் குழு தெரிவித்திருக்கிறது. சுமார் ஆறு வருடங்களுக்கு பிறகு தல தளபதி படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி போட்டியிடப் போகிறது. இதனால் இதை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus