சின்னத்திரையின் நயன்தாரா இன்று மக்களால் செல்லமாக அழைக்கப்படும் வாணிபோஜன் தனது வாழ்க்கையை சின்னத்திரையில் இருந்து ஆரம்பிதவர். முதலில் ஜெயா டிவியில் ஒளிபரப்பான மாயா என்ற சீரியலில் அறிமுகமாகி பின்னர் விஜய் தொலைக்காட்சியின் ஆஹா, சன் தொலைக்காட்சியின் தெய்வத்திருமகள் என்று படு பிஸியாக இருந்தார்.
தெய்வத்திருமகள் தொடரில் இவர் நடித்த சத்யப்ரியா என்ற கதாபாத்திரம் அனைவரின் மனதிலும் நீங்க இடத்தை பிடித்தது. மேலும் இவர் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையை நோக்கி பயணமானார்.
தெலுங்கில் நடிகர் விஜய் தேவரக்கொண்டா தயாரித்து வெளியான “மீக்கு மாத்திரமே செப்தா” என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமானார். தெலுங்கில் அந்த படம் ஹிட் அடித்தாலும் தமிழில் நல்ல வாய்ப்புக்காக காத்திருந்த நிலையில் “ஓ மை கடவுளே” திரைப்படம் வெளியானது.அதில் வாணி போஜனிற்கு ஹீரோயின் கதாபாத்திரம் இல்லையென்றாலும் அவரது கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் ஒரு பேட்டியில் சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி கேட்டபோது தனக்கு நேரடியாக அந்த மாதிரியான அனுபவம் இதுவரை நடந்தது கிடையாது. ஆனால் என்னுடைய மேனேஜரிடம் சிலர் கேட்டதாகவும் அதனை அவரே சமாளித்துவிட்டதாகவும் கூறினார். . சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இந்த மாதிரி பிரச்சனை நடக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் ” என்று கூறியிருந்தார்.
இப்பொழுது வாணி போஜன் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருவதாகவும், அதனை தயாரிப்பது இயக்குனர் எ.ஆர்.முருகதாஸ் என்றும், இயக்குவது முருகதாஸின் துணை இயக்குனர் என்றும் தெரியவருகிறது. தற்பொழுது லாக்டவுனால் ஷூட்டிங் தடைபட்டுள்ளது. இந்த பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு இந்த வெப் சீரிஸ் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என கூறப்படுகிறது!