‘ஜீ5’-க்காக உருவாகும் காமெடி படத்தில் வாணி போஜன்… ஹீரோ யார் தெரியுமா?

  • February 4, 2021 / 05:27 PM IST

தமிழில் ‘மாயா, ஆஹா, தெய்வ மகள், லட்சுமி வந்தாச்சு’ போன்ற டிவி சீரியல்களில் நடித்ததன் மூலம் அதிக கவனம் ஈர்த்த நடிகை வாணி போஜன். இவர் கடந்த ஆண்டு (2020) ரிலீஸான ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘லாக்கப்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்தார். வாணி போஜன் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இப்போது, வாணி போஜன் நடிப்பில் ‘தாழ் திறவா, பாயும் ஒளி நீ எனக்கு, கேசினோ’, அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கும் படம் என நான்கு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், வாணி போஜன் பிரபல OTT தளமான ‘ஜீ5’-க்காக நடித்துள்ள ஒரு புதிய காமெடி படம் தொடர்பாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த படத்தை பாப்புலர் இயக்குநர் ராதாமோகன் இயக்குகிறார். இதில் ஹீரோவாக வைபவ் நடித்துள்ளார். மேலும், முக்கிய ரோல்களில் மயில்சாமி, கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். பிரேம்ஜி அமரன் இசையமைத்து வரும் இதற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன் .கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில், இதன் ஷூட்டிங் முடிந்ததாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus