தமிழில் ‘மாயா, ஆஹா, தெய்வ மகள், லட்சுமி வந்தாச்சு’ போன்ற டிவி சீரியல்களில் நடித்ததன் மூலம் அதிக கவனம் ஈர்த்த நடிகை வாணி போஜன். இவர் இந்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதம் ரிலீஸான ‘ஓ மை கடவுளே’ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து வாணி போஜன் நடிப்பில் உருவான புதிய படம் ‘லாக்கப்’.
இதில் வைபவ் ஹீரோவாக நடித்திருந்தார். எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியிருந்த இந்த படத்தில் பூர்ணா, ஈஸ்வரி ராவ், வெங்கட் பிரபு ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடித்திருந்தனர். ‘கொரோனா’ பிரச்சனையால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இதனால், ‘லாக்கப்’ படம் ‘ஜீ 5’-வில் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி ரிலீஸானது.
சமீபத்தில், வாணி போஜனின் கால்ஷீட் டைரியில் ஒரு புதிய படம் இணைந்தது. ‘தாழ் திறவா’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோவாக ஆதவ் கண்ணதாசன் நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் பரணி சேகரன் இயக்குகிறார். தற்போது, நடிகை வாணி போஜன் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புதிய ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். படுக்கையில் படுத்தபடி வாணி போஜன் போஸ் கொடுத்துள்ள இந்த ஸ்டில்ஸை பார்த்து ஜொள்ளுவிடும் நெட்டிசன்களால் லைக்ஸ் குவிந்து வருகிறது.
https://www.instagram.com/p/CFGcb9rg_3u/
https://www.instagram.com/p/CFGcVIFgHy5/
https://www.instagram.com/p/CFGcKHOAl_s/
https://www.instagram.com/p/CFAFpeajCgl/