போலி ஆவணப்பதிவு ரத்து… நடிகை வாணிஸ்ரீயின் ரூ.20 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு!

  • October 1, 2022 / 11:33 AM IST

பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இவர் தமிழில் அறிமுகமான முதல் படம் ‘நம்ம வீட்டு லட்சுமி’ தான்.

அதன் பிறகு ‘காதல் படுத்தும் பாடு, தங்கத்தம்பி, கண்ணன் என் காதலன், உயர்ந்த மனிதன், நிறைகுடம், தலைவன், நான்கு சுவர்கள், இருளும் ஒளியும், வெள்ளி விழா’ போன்ற பல படங்களில் நடித்தார்.

பதிவுத்துறை சார்பில் போலி ஆவணத்தை இரத்து செய்யும் அதிகாரம் பதிவுத்துறைக்கு வழங்கப்பட்டதை தொடங்கி வைக்கும் விதமாக, போலி ஆவணப்பதிவினால் பாதிக்கப்பட்ட உண்மையான சொத்து உரிமையாளர்கள் ஐந்து நபர்களுக்கு நில அபகரிப்பாளர்களால் மோசடியாக ஆவணப் பதிவு செய்யப்பட்டதை இரத்து செய்து அதற்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதில் போலி பத்திரப்பதிவினால் சென்னை அமைந்தகரையில் உள்ள நிலத்தை இழந்த நடிகை வாணிஸ்ரீக்கும் அவரது ரூ.20 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus