ஸ்பூஃவ் படமாகும் வனிதா மற்றும் பீட்டர்பால் திருமண பிரச்சனை!
August 13, 2020 / 07:52 PM IST
|Follow Us
சமீபகாலமாக இணையதளத்தில் எங்கு பார்த்தாலும் வனிதா மற்றும் பீட்டர் பால் தொடர்பான பிரச்சினை பின்பு அதன் தொடர்பான விமர்சனங்கள் என இணையதளம் முழுவதும் இதைப் பற்றி தான் பேச்சு அரங்கேறி வந்தது.
வனிதா திருமணமான மறு நிமிடமே அவரது கணவர் பீட்டரின் முதல் மனைவி தங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை என்ற பிரச்சனையை கிளப்பினார். அதிலிருந்து பலரும் தங்களது விமர்சனங்களையும் கருத்துக்களையும் பதிவிட்டு அதற்கு வனிதா பதிலடியும் கொடுத்து வந்தார்.
போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கும் அளவுக்கு சென்ற இந்த சமூக வலைத்தளத்தில் நடந்த பிரச்சனை தற்போது ஸ்பூஃவ் மூவியாக வெளிவர உள்ளது.
“அமுக்கு டுமுக்கு அமால் டுமால்” என்ற ஸ்பூஃவ் மூவியை நடிகை ஆர்த்தி இயக்குனராகி உருவாக்கியுள்ளார். இதன் டீசர் தற்போது யூடியூபில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த படத்தில் பீட்டர்பாலாக நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன், வனிதாவாக நடிகை மதுமிதா ஆகியோரும் நடித்துள்ளார்களாம். நடிகை ஆர்த்தி மற்றும் அவரது கணவர் கணேஷ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்களாம். இந்த டீசரில் வனிதா வருவது போன்ற எந்த காட்சிகளும் வெளிவராத நிலையில் அதை ஒரு சுவாரஸியத்திற்காக ரகசியமாக வைத்திருக்கிறார்கள் என்றும் கூறலாம்.
தற்போது இந்த படத்தின் டீசரை நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ளாராம். தற்போது மக்கள் இந்த டீசரை பார்த்து வனிதாவின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.