“நீ யாருடா என்ன சொல்றதுக்கு”… ஷாரிக் – வனிதா இடையே மோதல்!

  • January 31, 2022 / 07:56 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிகழ்ச்சியில் இசை வாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா தேஷ்பாண்டே, அபிநய், பாவனி ரெட்டி, சின்னப்பொண்ணு, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, சுருதி, அக்ஷரா ரெட்டி, ஐக்கி பெர்ரி, தாமரைச்செல்வி, சிபி, நிரூப், அமீர், சஞ்சீவ் ஆகிய 20 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஜனவரி 16-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த சீசனில் ராஜு ஜெயமோகன் டைட்டில் வின்னர் என்றும், பிரியங்கா ரன்னர் அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நேற்று (ஜனவரி 30-ஆம் தேதி) முதல் பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’யில் 24 மணி நேரமும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’ என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக துவங்கியுள்ளது.

நடிகர் கமல் ஹாசனே தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் சினேகன், தாமரைச் செல்வி, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், அபிராமி, சுஜா வருணி, ஷாரிக், வனிதா, தாடி பாலாஜி, ஜூலி, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிநய், சுருதி, நிரூப் ஆகிய 14 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். தற்போது, இரண்டு புதிய ப்ரோமோ வீடியோக்கள் வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோக்களில் வனிதாவுக்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இவ்வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus