சமீபத்தில் இணையதளத்தில் வைரலாகி வருவது நடிகர் விஜயக்குமாரின் மகள் வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பாலின் திருமணம் மற்றும் பிரச்சனை பற்றி தான்.
சமீபத்தில் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணமான மறு நிமிடமே பீட்டர் பாலின் முதல் மனைவி தங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை என்று கண்ணீர் மல்க பேட்டி அளித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து வனிதா விஜயகுமார் திருமணம் குறித்து பலரும் விமர்சிக்க தொடங்கினார்கள். அனைவருக்கும் தக்க பதிலடி கொடுத்து வந்த வனிதா விஜயகுமார், சமீபத்தில் சிலர் மீது சைபர் புள்ளியிங் புகார் அளித்தார்.
இந்த பிரச்சனையில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தன் கருத்துக்களை பதிவிட்டு, ஏற்கனவே வனிதா அவரை சரமாரியாக திட்டியதால் மன்னிப்பு கேட்டு விலகியிருந்தார்.
தற்போது பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் தன் பிரச்சனையை முறையிட்டதால், மீண்டும் இந்த பிரச்சினையில் தன் கருத்துக்களைப் பற்றி பேச லட்சுமி ராமகிருஷ்ணன் முன்வந்துள்ளார்.
இதனால் கோபமடைந்த வனிதா ஒரு நேரலையில் சரமாரியாக லக்ஷ்மி ராமகிருஷ்ணனை திட்டித்தீர்த்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
லக்ஷ்மி ராமகிருஷ்ணனை தகாத வார்த்தைகளால் திட்டிய வனிதா, பின் தன் குடும்ப விஷயத்தில் தலையிட யாருக்கும் உரிமையில்லை என்று கடுமையாக கூறியிருக்கிறார்.
https://youtu.be/TCtXz-_wUNU