இணையதளம் முழுவதும் வனிதா மற்றும் பீட்டர் பாலின் திருமணம் தொடர்பான பிரச்சினைகள் பேசப்பட்டு வந்தாலும் வனிதா தன்னுடைய கணவர் பீட்டர் பால் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
கடந்த ஜூன் 27ஆம் தேதி பீட்டர் பாலை திருமணம் செய்துகொண்ட வனிதா விஜயகுமார் தனது இரண்டு குழந்தைகளுடனும் அவருடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். சமூக வலைத்தளம் முழுவதும் வனிதா திருமணத்தில் உள்ள பிரச்சினையை பற்றி விமர்சனங்கள் குவிந்து கிடக்கிறது.
இந்நிலையில் நேற்று தனது கணவர் பீட்டர் பாலின் பிறந்தநாளை காரில் தன் குழந்தைகளுடன் கொண்டாடி அந்த வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார் வனிதா.
தினமும் வீட்டில் சாப்பிடுவதால் பீட்டர் பாலின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக காரில் சாப்பிட முடிவு செய்ததாகவும், இது ஒரு வித்தியாசமான புதிய அனுபவமாக இருக்கிறது என்றும் பதிவிட்டிருக்கிறார். இந்தப் பிறந்தநாள் பார்ட்டி வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
என்னதான் பலர் அவரது திருமணத்தை விமர்சித்து வந்தாலும் வனிதா தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதை இந்த வீடியோ மூலம் தெளிவாக தெரிகிறது. வனிதாவின் மகள்களும் இவர்களுடன் சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்பது இந்த வீடியோ படம் பிடித்துக் காட்டுகிறது.
https://www.instagram.com/p/CDB4id1jCYj/?igshid=grvroi2jsk1w
https://www.instagram.com/p/CDCJ4cnDA-H/?igshid=1e9pvaaixu62
https://www.instagram.com/p/CDB4oK2jpsD/?igshid=5j96hno2qzei
https://www.instagram.com/p/CDAvJc2jjRT/?igshid=1j1dadrfqp4kk