சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படத்திலேயே ‘தளபதி’ விஜய் தான் ஹீரோ. அது தான் ‘சந்திரலேகா’. இந்த படத்துக்கு பிறகு நடிகை வனிதாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘மாணிக்கம், நான் ராஜாவாகப் போகிறேன், சும்மா நச்சுன்னு இருக்கு, எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்’ என தமிழ் படங்கள் குவிந்தது.
வனிதா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். பின், ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் லைக்ஸை குவித்தார். சமீபத்தில், பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டார் வனிதா. அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இப்போது, வனிதா விஜயகுமார் நடிப்பில் ஐந்து தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
கடந்த மாதம் நடிகை வனிதா விஜயகுமார் வடஇந்தியாவை சேர்ந்த பைலட் ஒருவரை 4-வது திருமணம் செய்து கொண்டார் என கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக வனிதா ட்விட்டரில் “இந்த தகவல் உண்மையல்ல. வதந்தியே” என்று கூறியிருந்தார். தற்போது, வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண கோலத்தில் பிரபல நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனுடன் இருக்கும் ஒரு ஸ்டில்லை வெளியிட்டுள்ளார்.
உடனே, வனிதா 4-வது திருமணம் செய்து கொண்டாரா? என்ற கேள்வி எழுந்தது. அதன் பிறகு ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் இன்ஸ்டாகிராமில் இதே ஸ்டில்லை ஷேர் செய்து “சகோதரி வனிதாவுடன் சேர்ந்து நடிப்பதில் மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார். இதன் மூலம் இவர்கள் இருவரும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.