பிக் பாஸ் 3 புகழ் வனிதா விஜயகுமார், தளபதி விஜய் பற்றி இதுவரை அவரது ரசிகர்களுக்கு தெரியாத ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். தளபதி விஜய் நடிப்பை தொடங்கிய காலங்களில், படத்தில் அவருக்கு தரப்படும் ஆடைகள் பிடிக்காததால் படப்பிடிப்புக்கு வர மாட்டேன் என்று சொல்லியிருக்கிறாராம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய், 90’களில் இருந்தே தனக்கென ஒரு இடத்தை திரைப்படவுலகில் பிடித்துள்ளார். 1984ஆம் வருடம் ‘வெற்றி’ என்ற தமிழ் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமான இவர் ,தன் தந்தை S.A.சந்திரசேகர் இயக்கத்தில் 1992 ஆம் வருடம் ‘நாளையதீர்ப்பு’ படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார்.
இதை தொடர்ந்து 1995 ஆம் வருடம் வெளிவந்த “சந்திரலேகா” என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை வனிதா விஜயகுமார் நடித்துள்ளார். அந்த படத்தில் வரும் ‘அல்லா உன் ஆணை’ பாடல் படப்பிடிப்பின்போது, தனக்கு அளித்த ஆடைகள் பிடிக்கவில்லை என்றும் , அதனால் தான் படப்பிடிப்புக்கு வரமாட்டேன் என்றும் தளபதி கூறியிருக்கிறார் என்று வனிதா ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். மேலும் அவர் , விஜய்யின் தாய் ஷோபனா சமாதானம் செய்து படப்பிடிப்பிற்கு அவரை அழைத்து வருவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அக்காலத்து படப்பிடிப்புகளில் ஆடை வடிவமைப்பாளர்கள் தனியாக இருந்ததில்லை என்றும் அதனால் இவ்வாறு நடத்தது என்றும் அவர் கூறியிருக்கிறார். நடிகை வனிதா பிக்பாஸ் 3 க்கு பிறகு கலக்கப்போவது யாரு என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.