சமீப காலமாக இணையதளம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட செய்தி வனிதா விஜயகுமாரின் திருமணம் மற்றும் அதன் தொடர்பான விமர்சனங்களும் ஆகும். இதற்கு பலவாறு தன் பதிலடிகளை கொடுத்து வந்த வனிதா அவ்வப்போது சில பிரபலங்கள் குறித்தும் தன் கருத்துக்களைப் பேசி தன்னுடைய பாலோவர்ஸ் எண்ணிக்கையை அதிகரித்து வந்தார்.
வனிதா பிரச்சனை இணையதளத்தில் பரவ ஆரம்பித்தது முதல் அவருக்கு ஒரு செலிபிரிட்டி லுக் இணையதளத்தில் கிடைத்துள்ளது. இதனைப் பயன்படுத்தி குக்கரி சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
தற்போது தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் கோவா சென்ற வனிதா அங்கு பீட்டர் பாலுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தி வந்தார். இந்த புகைப்படங்களை பலர் கலாய்த்து கமெண்ட் செய்து வந்தார்கள்.
இதைத்தொடர்ந்து கோவாவிலிருந்து திரும்பி வரும்போது பீட்டர் பாலுக்கும் வனிதாவுக்கும் பெரிய பிரச்சனை வெடித்ததாகவும், பீட்டரை வீட்டை விட்டு வெளியே துரத்திவிட்டார் வனிதா என்றும் தற்போது புதிய செய்தி பரவி வருகிறது.
இது குறித்து பேசிய வனிதா தன் வாழ்வில் அடுத்தடுத்து பிரச்சனைகள் வருகிறது என்றும் அதை மன தைரியத்துடன் அவர் எதிர் கொண்டு வருவதாகவும் இதை அனைவரும் மேலும் பெரிதாக்கி தன் மனதை காயப்படுத்த வேண்டாம் என்றும் இலைமறைகாயாக பதில் கூறியுள்ளார். வனிதாவும் பீட்டர் பாலும் பிரிந்து விட்டார்களா, வனிதா பீட்டர் பாலை அடித்தாரா போன்ற கேள்விகள் நிலவி வருகிறது. இதை வைத்து பல நெட்டிசன்கள் வனிதாவை கலாய்த்து வருகிறார்கள் பலர் இவருக்கு ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள்.