இனிதே நடந்தேறிய வனிதா- பீட்டர் பால் திருமணம்!

  • June 27, 2020 / 04:17 PM IST

வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பாலின் திருமணம் இன்று அவர்களது இல்லத்தில் இனிதே நடந்தேறியது. இரு வீட்டார் மற்றும் நண்பர்கள் சூழ இந்த திருமணம் நடந்துள்ளது.

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார் பீட்டர் பால் உடனான தனது காதல் பற்றியும், அவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அவர் திருமணத்தை பற்றி அறிவித்த நாள் முதலே இணையதளம் முழுவதும் இவரது திருமணத்தை பற்றிய பேச்சுதான் அரங்கேறியது.

பின்பு அவர் தனது திருமண முன்னேற்பாடுகள் குறித்து பதிவிட்டிருந்தார். அதற்குப் பிறகு பீட்டர் பால் மற்றும் வனிதா இருவரும் அவர்களது பெயர்களை டாட்டூ செய்து காதல் சின்னமாக வெளியிட்டிருந்தார்கள்.

இந்த காதல் ஜோடிக்கு இன்று திருமணம் இனிதே அவர்களது இல்லத்தில் நடைபெற்றது. கிறிஸ்டியன் முறைப்படி நடந்த இந்த திருமணத்தின் புகைப்படங்கள் இணையதளத்தில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் அவரது குடும்ப நபர்கள் நண்பர்கள் ஆகியோர் சூழ திருமணம் நடைபெற்றது பதியப்பட்டிருக்கிறது. இவரது திருமணத்திற்காக வனிதா விஜயகுமாரின் தாய் மஞ்சுளா வைர மோதிரங்களை பரிசளித்துள்ளார் என்று வனிதா மகிழ்ச்சியாக செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இது வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம். அவருக்கு ஏற்கனவே ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus