இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை வனிதா விஜயகுமார்!

  • October 24, 2020 / 10:56 PM IST

சமீப காலமாக இணையதளம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட செய்தி வனிதா விஜயகுமாரின் திருமணம் மற்றும் அதன் தொடர்பான விமர்சனங்களும் ஆகும்.

இதற்கு பலவாறு தன் பதிலடிகளை கொடுத்து வந்த வனிதா அவ்வப்போது சில பிரபலங்கள் குறித்தும் தன் கருத்துக்களைப் பேசி தன்னுடைய பாலோவர்ஸ் எண்ணிக்கையை அதிகரித்து வந்தார்.

வனிதா பிரச்சனை இணையதளத்தில் பரவ ஆரம்பித்தது முதல் அவருக்கு ஒரு செலிபிரிட்டி லுக் இணையதளத்தில் கிடைத்துள்ளது. இதனைப் பயன்படுத்தி குக்கரி சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இதைத்தொடர்ந்து தற்போது தொடங்கியுள்ள பிக்பாஸ் 4 நிகழ்ச்சியை விமர்சனம் செய்யவும் ஒரு நிகழ்ச்சி ஒன்றை தனது யூடியூப் சேனலில் தொகுத்து வழங்க உள்ளாராம் வனிதா விஜயகுமார்.

இவர் இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தோடு கொண்டாடி வருகிறார். இணையதளம் முழுவதும் இருக்கும் இவரது ரசிகர்கள் இவருக்கு தங்களது வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus