பிரபல தமிழ் திரைப்பட நடிகையான வனிதா விஜயகுமார்,பீட்டர் பால் என்பவரை விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுருந்தார்.
வருகிற ஜூன் 27ஆம் தேதி குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ இவர்களது இல்லத்திலேயே தங்களது திருமணம் நடக்கவிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
கல்யாண வேலையில் பிஸியாக இருக்கும் வனிதா தற்போது தனது வருங்கால கணவரான பீட்டர் பாலின் பெயரை டாட்டூ செய்தும்,பீட்டர் பாலும் வனிதாவின் பெயரை டாட்டூ செய்தும் அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்கள். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
சமீபத்தில் அவர்கள் திருமணத்திற்கு வனிதாவின் மகள் வாழ்த்துக் கூறி கமெண்ட் செய்தது வைரலான நிலையில், தற்போது இந்த டாட்டூ புகைப்படம் இணையதளங்களில் பரவுகிறது.
இது வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. திருமண வேலைகளில் செம பிஸியாக உள்ளாராம் வனிதா.