தளபதி விஜய்க்கு பெரிய ஐஸ் வைத்த வனிதா விஜயகுமார்!

  • August 14, 2020 / 10:35 PM IST

உங்களுக்கு தான் அவர் தளபதி எனக்கு அவர் வெறும் விஜய் என்று கூறிய வனிதா விஜயகுமார் தற்போது விஜய்யை பற்றி புகழ்ந்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதை விஜய் ரசிகர்கள் எதற்கு வனிதா இப்படி ஐஸ் வைக்கிறார் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

சமீபகாலமாக இணையதளம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பால் திருமணம் ஆகும். இந்த திருமணம் குறித்து பீட்டர் பாலின் முதல் மனைவி தனக்கும் பீட்டர் பாலுக்கும் இன்னும் விவாகரத்து ஆகவில்லை என்ற பிரச்சினையை கொண்டு வந்ததிலிருந்து, பலரும் வனிதாவை விமர்சனம் செய்து வந்தார்கள்.

கடுமையான விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்ட வனிதா விஜயகுமார் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வந்தார். லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை கஸ்தூரி மற்றும் சூர்யாதேவி என்ற பெண் வனிதாவை இன்றுவரை விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இணையதளத்தில் அரங்கேறிய இந்த பிரச்சனை போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது. இவர்கள் எது கூறினாலும் அது பெரும் சர்ச்சையையும் விமர்சனத்தையும் கிளப்பியது. கடைசியாக லட்சுமிராமகிருஷ்ணன் தன்னைப் பற்றி அவதூறு பரப்பியதாக வனிதாவிற்கு 1.25 கோடி நஷ்ட ஈடு கொடுக்க கோரி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதையடுத்து, வனிதா 2.5 கோடி பதிலுக்கு நஷ்ட ஈடாக கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இப்படி பரபரப்பாக நடந்த அவர்கள் மோதல் தற்போது அமைதியாக உள்ளது. இந்நிலையில் வனிதாவின் ரசிகர் ஒருவர் அவர் விஜய்யுடன் நடித்த சந்திரலேகா படத்தின் போஸ்டர் ஒன்றை அவருடன் ஷேர் செய்துள்ளார்.

இதையடுத்து வனிதா விஜய்யை டேக் செய்து, என் முதலும் எப்போதும் ஆன ஹீரோ நீங்கள்தான். நான் உங்களது மிகப்பெரிய ரசிகை. உங்களது ஒவ்வொரு படங்களும் வெளிவரும்போது உங்கள் மேல் இருக்கும் மதிப்பு இன்னும் அதிகமாகிறது. நீங்கள் ஒரு ஒயின் பாட்டில் போல, வயது அதிகமாக அதிகமாக உங்கள் மீதான அன்பும் அதிகமாகிறது என்று விஜய்யை ஐஸ் வைப்பது போன்று பதிவிட்டுள்ளார். விஜய் ரசிகர்களின் ஆதரவுக்காகவே அவர் இப்படி செய்துள்ளார் என்று இவரை கலாய்த்து வருகிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus