அதிரடியாக போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்துள்ள வனிதா விஜயகுமார்!

  • July 14, 2020 / 08:35 PM IST

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை சமீபத்தில் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். அவர் திருமணம் செய்து கொண்ட நாள் முதலே ஏதாவது ஒரு சர்ச்சையான செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது.

இவர் திருமணமான மறுநிமிடமே பீட்டர் பாலின் முதல் மனைவி இன்னும் தங்களுக்கு விவாகரத்து ஆகவில்லை என்னும் செய்தியை வெளியிட்டார். அதிலிருந்து பலரது விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கும் வனிதா விஜயகுமார் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்து தான் வருகிறார்.

சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்திர் வனிதாவை பற்றி சரமாரியாக விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டார். அதன்பின் சூர்யா தேவி என்ற பெண் வனிதா விஜயகுமார் பற்றி அவதூறாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இவர்கள் இருவராலும் மிகவும் மனவுளைச்சலுக்கு ஆளான வனிதா விஜயகுமார், தற்போது இவர்கள் மீது சைபர் புல்லியிங் புகாரை காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார்கள்.

இந்த புகாரை கொடுத்து விட்டு வெளியே வந்த வனிதா விஜயகுமார் மற்றும் அவரது லாயர் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்கள்.

இந்த பேட்டியில் வனிதா விஜயகுமார் ” அடுத்தவர் பர்சனல் விஷயத்தில் தலையிடுவதற்கு எவருக்குமே அனுமதி இல்லை. மேலும் என் வாழ்க்கையில் தலையிடுவதற்கு தயாரிப்பாளர் ரவீந்தர்க்கோ அல்லது சூர்யா தேவிக்கோ எந்தவித சம்பந்தமுமில்லை. நான் தொழில் ரீதியாகவோ வாழ்க்கை ரீதியாகவோ இவர்கள் இருவரிடமும் எந்த சம்பந்தமும் வைத்துக்கொள்ளவில்லை. எனினும் என்னைப் பற்றியும் என் வாழ்க்கை பற்றியும் அவதூறான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். நான் ஒரு தாய். இவர்கள் இப்படி பேசுவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஒரு சிங்கிள் பெரண்டாக நான் நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறேன். எனக்கு ஒரு வாழ்க்கை துணை தேவை என்று நான் எடுத்த இந்த முடிவில் சில பிரச்சினைகள் வரத்தான் செய்துள்ளது. அதை நான் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். அதற்காக என்னை இவ்வளவு ஏளனமாகவும் கீழ்தரமாகவும் பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. என்னை இப்படி பேசிய சூர்யா தேவிக்கும் இந்த தயாரிப்பாளருக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது. இதைப்பற்றி போலீசே விரைவில் செய்தி வெளியிடுவார்கள். இவர்களுக்குள்ளிருக்கும் சம்பந்தம் குறித்து எங்களிடம் தகுந்த ஆதாரம் இருக்கிறது. உண்மை விரைவில் வெளிவரும்” என்று உருக்கமாக கூறியுள்ளார்.

மேலும் வனிதாவின் லாயர் பேசியபோது ” மதுரையில் வாழும் பெண்மணி என்று கூறும் இந்த சூர்யா தேவி அவ்வளவு கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறார். வீட்டிற்குள் வந்து வெட்டி விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். ஒரு குடும்ப பெண்மணி இப்படி எல்லாம் பேசுவாரா. இவர் ஒரு கஞ்சா கடத்தல் பெண் என்பதற்கு எங்களிடம் தகுந்த ஆதாரம் இருக்கிறது. இப்படி பிரபலங்கள் பற்றி பேசி பப்ளிசிட்டி தேடிக் கொள்கிறார். விரைவில் தகுந்த ஆதாரத்துடன் இவரை போலீசார் விசாரிப்பார்கள். என்னிடம் இருக்கும் ஆதாரங்களை நான் விரைவில் வெளியிடுவேன்” என்று கூறியிருக்கிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus