சமீப காலமாக இணையதளம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட செய்தி வனிதா விஜயகுமாரின் திருமணம் மற்றும் அதன் தொடர்பான விமர்சனங்களும் ஆகும். இதற்கு பலவாறு தன் பதிலடிகளை கொடுத்து வந்த வனிதா அவ்வப்போது சில பிரபலங்கள் குறித்தும் தன் கருத்துக்களைப் பேசி தன்னுடைய பாலோவர்ஸ் எண்ணிக்கையை அதிகரித்து வந்தார்.
வனிதா பிரச்சனை இணையதளத்தில் பரவ ஆரம்பித்தது முதல் அவருக்கு ஒரு செலிபிரிட்டி லுக் இணையதளத்தில் கிடைத்துள்ளது. இதனைப் பயன்படுத்தி குக்கரி சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இதைத்தொடர்ந்து தற்போது தொடங்கியுள்ள பிக்பாஸ் 4 நிகழ்ச்சியை விமர்சனம் செய்யவும் ஒரு நிகழ்ச்சி ஒன்றை தனது யூடியூப் சேனலில் தொகுத்து வழங்க உள்ளாராம் வனிதா விஜயகுமார்.
தற்போது தன் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தன் காதலர் பீட்டர் பாலுடன் கோவா பக்கம் படை எடுத்துள்ளார் இந்த நடிகை. அங்கு சென்று தன் குழந்தைகளுடனும் காதல் கணவர் பீட்டர் பாலுடனும் நேரத்தை செலவிட்டு வந்த வனிதா அந்த புகைப்படங்களை அவ்வப்போது இணையதளத்தில் வெளியிட்டு வந்தார்.
பீட்டர் பாலும் வனிதாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை கண்ட சில நெட்டிசன்கள் இந்த வயதான காலத்தில் இப்படி போஸ் தேவையா என்று அவரை எக்கச்சக்கமாக கலாய்த்து கமெண்ட் செய்துள்ளனர். இதனால் வனிதா தனது இன்ஸ்டாகிராமில் உள்ள கமெண்ட்ஸ் செக்ஷனை ஆப் செய்துவிட்டாராம்.
1
2
3
4
5
6
7
8
9
10