சமீபத்தில் இணையதளம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட செய்தி வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பால் திருமணம், அதன்பின் அவர்கள் திருமணத்தில் வந்த பிரச்சனை மற்றும் விமர்சனங்கள் ஆகும்.
இந்தப் பிரச்சினையில் லட்சுமி ராமகிருஷ்ணன் தொடங்கி பல பிரபலங்கள் தங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் பதிவிட்டு அதற்கு வனிதா பதிலடியும் கொடுத்து வந்தார்.
இந்நிலையில் வனிதா விஜயகுமார் பிரச்சனையில் ஈடுபட்ட ஒரு நபர் தற்போது நடக்கவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாகவும், இதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபிடிக்கும் என்றும் கருத்து ஒன்று தற்போது பரவி வருகிறது.
ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா பிரச்சனையில் கைதான சூர்யா தேவி கலந்துகொள்ளப் போவதாக ஒரு தகவல் வெளியானது.
இதைத்தொடர்ந்து தற்போது வனிதாவின் கணவர் பீட்டரின் முதல் மனைவி ஹெலன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக தற்போது ஒரு செய்தி வந்துள்ளது. இதனால் வனிதாவுக்கு எதிரான சூர்யா தேவி மற்றும் ஹெலன் இந்த நிகழ்ச்சியில் இருந்தால் என்னென்ன கலவரம் நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
சென்ற பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்டு மக்களுக்கு பல என்டர்டைன்மென்ட்களை கொடுத்த வனிதா இந்த சீசனில் கலந்து கொள்ளாமலேயே மக்களுக்கு என்டர்டைமெண்ட் கொடுக்கப் போகிறார் என்ற கேளிப் பேச்சு தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவினர் இதுபோன்ற ஏடாகூடமான பங்கேற்பாளர்களை தேர்வு செய்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்தை குறையாமல் பார்த்துக் கொள்கிறார்கள். அடுத்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னென்ன நடக்கப் போகிறது என்று தற்போது மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.