வனிதாவை தொடர்ந்து களமிறங்கிய வனிதாவின் தங்கை ஸ்ரீதேவி!
September 10, 2020 / 04:00 PM IST
|Follow Us
சமீப காலமாக இணையதளம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதாவின் திருமணம் மற்றும் அதன் தொடர்பான பிரச்சினைகள் குறித்த விமர்சனங்களும் ஆகும்.
லாக்டவுனில் வீட்டில் முடங்கிக் கிடந்த மக்களுக்கும் நெட்டிசன்களுக்கும் விருந்தளிக்கும் விதமாக வனிதாவின் பிரச்சனை காரசாரமாக விவாதிக்கப்பட்டது. இதற்கான பதிலடிகளையும் வனிதா அவ்வப்போது கொடுத்து வந்தார்.
இந்நிலையில் தற்போது வனிதாவின் தங்கையான நடிகை ஸ்ரீதேவி இணையதளத்தில் தனது ரீசன்ட் புகைப்படங்களை வெளியிட்டு கதிகலங்க வைத்துள்ளார்.
சத்யராஜ் நடிப்பில் வெளியான “ரிக்ஷா மாமா” திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை ஸ்ரீதேவி தொடர்ந்து பிரியமான தோழி தேவதையை கண்டேன் போன்ற ஒரு சில படங்களில் நடித்திருந்தார்.
அதன்பின் 2009 ஆம் ஆண்டு ராகுல் என்ற தொழிலதிபரை மணந்து கொண்டு திரையுலகம் பக்கம் வராமல் இருந்து, தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகியுள்ள நடிகை ஸ்ரீதேவி திடீரென சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக தனது தற்போதைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இப்போதுள்ள ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் இவரது புகைப்படங்கள் இருப்பதாகவும் மீண்டும் திரைப்படத்தில் நடிப்பதற்காகக்தான் இவ்வாறு படங்களை வெளியிட்டு வருகிறார் என்றும் நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை கூறி வருகிறார்கள்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.