சைபர் புல்லியிங் குறித்து வனிதாவின் அதிரடி அறிக்கை!

  • August 8, 2020 / 11:18 AM IST

சமீபகாலமாக இணையதளத்தில் வனிதா விஜயகுமார் திருமணம் மற்றும் சினிமா பிரபலங்கள் குறித்த மீரா மிதுனின் நெகட்டிவ் விமர்சனங்களும் தான் வைரலாகி வருகிறது‌.

மீரா மிதுன் நடிகர் சூர்யா மற்றும் விஜய் பற்றி தவறான கருத்துக்களையும், அவரது குடும்பத்தை பற்றிய தவறான கருத்துக்களையும் தற்போது பதிவிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பி ரசிகர்களிடமிருந்து கோபமான கமெண்ட்களை பெற்று வருகிறார். அனைவரும் மீராமிதுன் இதை நெகட்டிவ் பப்ளிசிட்டிக்காக செய்கிறார் என்று திட்டி தீர்க்கிறார்கள்.

இந்நிலையில் இதுகுறித்து இலை மறை காயாக வனிதா தற்போது செய்தி வெளியிட்டுள்ளார். மேலும் அவர் சமூக வலைத் தளத்தை இப்படி சிலர் துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்றும், தங்கள் செல்பிஷ் காரணங்களுக்காக இப்படி இந்த கெட்ட விஷயங்களை பரப்புகிறார்கள் என்றும் கூறியுள்ளார். இதனால் சைபர் புல்லியிங் சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வனிதா கூறியுள்ளதாவது “இப்பொழுதாவது சோசியல் மீடியாவை ஒருவர் எப்படி நெகட்டிவாக உபயோகிக்கலாம் என்று உங்களுக்கு தெரிகிறதா? பேச்சு சுதந்திரம் என்பது அடுத்தவர் வாழ்வில் தலையிட்டு எதைப்பற்றி வேண்டுமானாலும் யாரைப் பற்றி வேண்டுமானாலும் தவறான கருத்துக்களை பதிவிடலாம் என்பது அல்ல. அதுமட்டுமின்றி இந்த சின்ன சின்ன யூடியூப் சேனல்கள் சிறிய விஷயங்களை கூட ஊதிப் பெரிதாக்கி விடுகிறார்கள். சைபர் புல்லியிங் சட்டங்களை கடுமையாக்குவதன் மூலம் இதை நிறுத்த முடியும்”என்றிருக்கிறார்.

மேலும் அவர் “இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம். ஒருவரது வாழ்வில் இது பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும். அடுத்தவரைப் பற்றி தவறான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வது சுலபம் ஆனால் விக்டிமாக இருப்பதுதான் கடினம். ஒருவர் விமர்சனம் செய்தால் அதற்கு பதிலடி கொடுக்க காயப்பட்டவர் பேசும்பொழுது காயப்பட்டவர் பேசியதை மட்டுமே பெரிதாக்கி அதை குற்றம் சொல்லுவது எளிது. அனைவரும் அவரவர் வேலையை பார்த்தால் இது எதுவுமே நிகழாது” என்று அதிரடியாக பதிவிட்டுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus