லாக்டவுனில் வஞ்சகர் உலகம் இயக்குனர் திருமணம் இனிதே நடந்தேறியது!

2018 ஆம் ஆண்டு குருசோமசுந்தரம் நடிப்பில் வெளியான “வஞ்சகர் உலகம்” படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் மனோஜ் பீதா. லாபிரின்ந் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இந்தத் திரைப்படம் இதன் கிரைம் திரில்லர் கதைக் களத்திற்காக மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

சாம்.சிஎஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தின் இயக்குனர் மனோஜ் பீதா தற்போது நடிகை ஷாலினி வட்னிகட்டியை தனது இல்லத்தில் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ திருமணம் செய்து கொண்டார்.

லாக்டவுனில் நடந்த இவர்களது திருமணம் அரசின் அனைத்து பாதுகாப்பு முறைகளையும் கடை பிடித்து நடத்தப்பட்டதாக அறிவித்துள்ளார்கள்.

தற்போது சமூக வலைத்தளத்தில் இவர்கள் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. நண்பர்கள் உறவினர்கள் திரையுலகைச் சேர்ந்தவர்கள் இவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.

Share.