தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான வரலட்சுமி சரத்குமார், பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார்.
பொதுவாக தனது படங்களில் வரும் ஸ்டண்ட் காட்சிகளை தானே செய்து கொள்ளும் அளவிற்கு தனது உடலை நேர்த்தியாக வைத்திருக்கும் இவரின் பிட்னஸ் ரகசியத்தை பற்றி அவரே வெளியிட்டுள்ளார்.
தன்னுடைய உடல் எடையை குறைக்கும் அவருடைய அந்த ஜர்னி மிகவும் சுலபமாக இருந்ததற்கு, அவர் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் விடாமுயற்சி தான் காரணம் என்று கூறியுள்ளார்.
மனது ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நம்மை நாம் விரும்பி எந்த ஒரு செயலை மேற்கொண்டாலும் அது நமக்கு பலனைத்தரும் அதுபோலத்தான் இந்த ஃபிட்னஸ் என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போது தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக இருக்கும் இவரது “வெல்வெட் நகரம்” மற்றும் “டேனி” ஆகிய திரைப்படங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளது.
மேலும் கன்னி ராசி, காட்டேரி மற்றும் சேசிங் அங்கே திரைப்படங்களின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. இந்தப் படங்கள் மட்டுமின்றி மேலும் பல படங்களில் நடிப்பதற்கு இவர்கள் ஒப்பந்தமாகி படங்கள் வெவ்வேறு கட்டங்களில் தற்போது தயாராகி வருகிறது.