அறிக்கை வெளியிட்ட நடிகை வரலட்சுமி சரத்குமார்!

  • December 4, 2020 / 08:54 AM IST

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான வரலட்சுமி சரத்குமார், பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார்.

தற்போது தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக இருக்கும் இவரது “வெல்வெட் நகரம்” மற்றும் “டேனி” ஆகிய திரைப்படங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளது.

மேலும் கன்னி ராசி, காட்டேரி மற்றும் சேசிங் அங்கே திரைப்படங்களின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. இந்தப் படங்கள் மட்டுமின்றி மேலும் பல படங்களில் நடிப்பதற்கு இவர்கள் ஒப்பந்தமாகி படங்கள் வெவ்வேறு கட்டங்களில் தற்போது தயாராகி வருகிறது.

இவரின் இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் அக்கவுன்ட்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், அதை சரி செய்வதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் இவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus