தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவரான வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் “டேனி”. இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் பட வேலைகள் முடிந்த நிலையில் லாக்டவுன் காரணமாக இந்த படம் ZEE5 OTT தளத்தில் வெளியாகிறது.
பிஜி மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில் எல்.சி.சந்தான மூர்த்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமாருடன் சாயாஜி ஷிண்டே, வேலராமமூர்த்தி, அனிதா சம்பத், கவின், வினோத் கிஷன், துரை சுதாகர் ஆகிய நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
தஞ்சாவூரில் நடக்கும் ஒரு கொலையை பற்றி இன்வஸ்டிகேட் செய்யும் போலீசாக வரலட்சுமி சரத்குமார் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தில் போலீஸ் நாய்க்கு மிக முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறதாம். இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே ஜோதிகா நடிப்பில் வெளிவந்த “பொன்மகள்வந்தாள்” மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த “பெண்குயின்”ஆகிய திரைப்படங்கள் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் காயத்ரி ரகுராம் நடிப்பில் “யாதுமாகி நின்றாய்”திரைப்படம் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியானது. இதைத்தொடர்ந்து தற்போது வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் “டேனி” திரைப்படம் அதே ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்த லாக்டவுனில் தொடர்ந்து நடிகைகளை முன்னணியில் கொண்ட கதைகள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது. ஹீரோயின்கள் நடிக்கும் படத்தை முதலில் OTTயில் வெளியிட்டு சோதனை செய்யும் கோலிவுட் தயாரிப்பாளர்கள், இதனை தொடர்ந்து விரைவில் ஹீரோக்களின் படங்களையும் OTTயில் வெளியிட திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.