சமீபத்தில், ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜோதிகா, தஞ்சாவூர் கோவிலை பற்றி சில கருத்துகளை கூறியிருந்தார். அதில், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் மிக அழகாகவும் பிரமிப்பாகவும் இருந்ததாகவும், அதே சமயம் தஞ்சவூரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்று மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் கூறினார். எனவே கோவில் உண்டியலில் பணம் போடுவது போல் மருத்துவமனைகள், பள்ளிகள் போன்ற மக்களுக்கு தேவையான இடங்களிற்கும் உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று தனது கருத்தை பதிவுசெய்தார்.
இந்த கருத்தை தவறாக புரிந்து கொண்ட சில நெட்டிசென்கள் ஜோதிகா மீது தங்களது வெறுப்பினை சமூக வலைத்தளங்கள் மூலமாக காட்டினார். இதனிடையே. ஜோதிகாவின் கணவரான நடிகர் சூர்யா தனது மனைவிக்கு ஆதரவு தரும் பொருட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் ஜோதிகா கூறிய கருத்தில் நாங்கல் உறுதியாக இருப்பதாகவும், “‘மக்களுக்கு உதவினால், அது கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கை’ என்பது ‘திருமூலர்’ காலத்து சிந்தனை. நல்லோர் சிந்தனைகளைப் படிக்காத, காது கொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை.” என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் ஒரு இ-நேர்காணலில் இதனை பற்றிய தனது கருத்தினை பகிர்ந்துள்ளார். அதில் ” இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இந்நாட்டில் அனைவருக்கும் பேச்சு சுதந்திரம் உண்டு. அவரது கருத்தை ஏற்பதற்கும், மறுப்பதற்கும் நமக்கு முழு அதிகாரம் உண்டு. ஆனால் கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாமல் கருத்து கூறிய நபரை தரகுறைவாக பேசுவது தவறு” என்று கூறியுள்ளார் .
மேலும் “ஜோதிகா கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை. இருப்பினும் அதனை புரிந்து கொள்ளாத சிலர் தேவையில்லாமல் விவாதங்களை தொடங்கி, அவர் மீது வெறுப்பினை பரப்ப ஆரம்பித்தார்கள். ஒரு கருத்து புரியவில்லை என்றால் அதை கேட்டு புரிய முயற்சிக்க வேண்டும். அதை தவிர்த்து வெறுப்பை மட்டுமே பரப்புது ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறினார்.
இப்பொழுது சமூக வளைத்தலங்களில் நடிகர் நடிகைகள் மீது வெறுப்பை காட்டுவது என்ற பெயரில் அவர்களை அநாகரீமாக திட்டுவது என்பது ஒரு பழக்கமாக மாறிவருகிறது. அதனை நாம் பெரிதுபடுத்தாமல் நமது செயலில் கவனத்தை செலுத்த வேண்டும் என்றும், இந்த லக்கடவுனில் வீட்டில் இருக்கும் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும்,அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.