போலீஸாக மாஸ் காட்டிய வரலக்ஷ்மி… ‘டேனி’ படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!
August 1, 2020 / 07:38 PM IST
|Follow Us
‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இதனால், தயாரிப்பாளர்கள் படங்களை நேரடியாக OTT-யில் ரிலீஸ் செய்து வருகிறார்கள். சமீபத்தில், ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பெண்குயின்’, யோகி பாபு நடித்துள்ள ‘காக்டெய்ல்’ ஆகிய தமிழ் படங்கள் OTT-யில் வெளி வந்தது.
இந்நிலையில், இன்று ‘ஜீ 5’-யில் ‘டேனி’ என்ற படம் வெளியாகியுள்ளது. இதில் ஹீரோயினாக ‘மக்கள் செல்வி’ வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ளார். ‘டேனி’ என்ற டைட்டில் ரோலில் ஒரு நாய் நடித்துள்ளதாம். படத்தில் வரலக்ஷ்மி காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்திருக்கிறாராம்.
இதனை ல.சி.சந்தான மூர்த்தி இயக்கியுள்ளார். அனிதா சம்பத், வேல ராமமூர்த்தி, சாயாஜி ஷிண்டே ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடித்திருக்கிறார்கள். இப்போது இந்த படத்தை ‘ஜீ 5’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
#Danny Real content based take action. @varusarath#kunthavai justified the role and performed very well..@anithasampath_ before some movie acted in new reader now turned on actress. Well perfmed role #mathivathani.. Best wishes to whole team of #Danny..
#Danny 1hr 35 minute's engaging murder mystery well portrayed by makkal selvi @varusarath .@OfficialAnitha who plays sister role scored well as next door girl. " Mystery + comedy first half. Emotion + thriller 2nd half.." (dogs always smart & sincere shown this film too)
#Danny Swinging violently b/w feeling sorry for myself for watching this at 6AM on a Saturday and feeling sorry for Varu for spending months on this. I think it's time to kill the cop movie genre in Tamil cinema.
— Ranjani (tharkuri@mastodon.social | sigh!) (@_tharkuri) August 1, 2020