வெளியானது வாரிசு படத்தின் மூன்றாவது பாடல் !

  • December 20, 2022 / 05:26 PM IST

டிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் . தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து வருகிறார் . ராஷ்மிகா நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பிரபு , சரத்குமார் , பிரகாஷ் ராஜ் ,குஷ்பு , ஷ்யாம் , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து உள்ளனர் .

இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் பாடல் சில நாட்களுக்கு முன் வெளியானது . தமன் இசையில் ரஞ்சிதமே என்கிற பாடலை நடிகர் விஜய் மற்றும் மானசி இணைந்து பாடி இருந்தனர் . வெளியான முதல் இந்த பாடல் விஜய் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இதனை தொடர்ந்து தீ தளபதி என்கிற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . தமிழ்நாட்டில் வருகிற பொங்கல் தினத்தன்று இந்த படம் வெளியாக உள்ளது என்று படக்குழு அறிவித்து இருந்தது .

இந்நிலையில் வாரிசு படத்தின் மூன்றாவது பாடல் தற்போது வெளியாகி உள்ளது . பாடலாசிரியர் விவேக் வரிகளில் சின்னக்குயில் சித்ரா குரலில் ஒலிக்கும் இந்த பாடல் தற்போது விஜய் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது .

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus