வாரிசு படத்தை விமர்சித்த ரவீந்தர் !

  • January 19, 2023 / 11:55 AM IST

நடிகர் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் வாரிசு . தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து உள்ளார் . ராஷ்மிகா நாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , ஷ்யாம் , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து உள்ளனர் .

ஜனவரி மாதம் 11 -ஆம் தேதி தமிழில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது . வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் வாரிசு படத்தை பார்த்த பிரபல தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்திரன் வாரிசு படத்தின் கதை கார்த்தி நடித்த விருமன் படம் மாதிரி உள்ளது என்று சொல்லுகிறார்கள் அவர்கள் சொல்வதை யோசித்து பார்த்தால் உண்மை போன்று தான் உள்ளது என்று கூறியுள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus