நடிகர் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் வாரிசு . தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து உள்ளார் . ராஷ்மிகா நாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , ஷ்யாம் , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளார் .
ஜனவரி மாதம் 11 -ஆம் தேதி தமிழில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுது. தெலுங்கு சினிமா ரசிகர்களும் இந்த படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு தரவில்லை.
இந்நிலையில் வாரிசு படம் உலக அளவில் 300 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளது என்று தயாரிப்பாளர் தரப்பு கூறுகிறது . வாரிசு படம் தில் ராஜுவின் சொந்த ஊரான ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கிட்டதட்ட 100 கோடி வசூல் செய்யும் என்றும் அதில் 50 கோடி லாபம் கிடைக்கும் என தில் ராஜு எதிர்பார்த்து இருந்தார். ஆனால் அவருக்கு லாபமாக 13 கோடி மட்டுமே கிடைத்துள்ளது .
மேலும் தமிழ்நாட்டில் வாரிசு படத்தின் நிலமை மிக மோசமாகி உள்ளது . வாரிசு படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை லலித் 60 கோடிக்கு வாங்கி இருந்தார். வாரிசு படம் மூலம் லலித்துக்கு தமிழ்நாட்டில் ஷேர் என்பது 67 கோடி தான் கிடைத்துள்ளது. 60 கோடிக்கு வாங்கிய படத்திற்கு 7 கோடி லாபம் கிடைத்து உள்ளது ஆனால் அதுவும் முழுவதாக அவருக்கு கிடைக்கவில்லை . வாரிசு படத்தின் விளம்பரம் மற்றும் ப்ரோமோஷனுக்காக 5 கோடி செலவு செய்துள்ளார் லலித் எனவே வாரிசு படம் மூலம் 2 கோடி ரூபாய் மட்டுமே லாபமாக கிடைத்து உள்ளது .
300 கோடி வசூல் செய்து இருந்தாலும் பெரிய அளவிற்கு தயாரிப்பாளருக்கும் , விநியோகஸ்தருக்கும் லாபத்தை தரவில்லை என்று கூறப்படுகிறது . நடிகர் விஜய்யை வைத்து பெரிய அளவில் லாபம் பார்க்கலாம் என்று திட்டிமிட்டவர்களுக்கு ஏமாற்றும் மிஞ்சி உள்ளது .