விக்ரம் படத்தை மிஞ்சிய நடிகர் விஜய்யின் வாரிசு !

  • July 19, 2022 / 05:35 PM IST

நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படமான தளபதி 66 படத்தின் பூஜை சென்னையில் சில மாதங்களுக்கு முன்னர் நடந்தது . அதன் பிறகு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடந்தது . அதன் பிறகு படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது.

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார் . தோழா படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கி வருகிறார் . மேலும் இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , பிரபு , நடிகை ஜெயசுதா , நடிகை சங்கீதா மற்றும் பிக் பாஸ் புகழ் சம்யுக்தா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது . வாரிசு என்று தலைப்பு வைத்துள்ளனர் .இந்நிலையில் வாரிசு படத்தின் நான்காவது கட்ட படப்பிடிப்பு ஆந்திராவில் நடந்து வருகிறது.

இசையமைப்பாளர் தமன் முதன் முதலாக விஜய் படத்திற்கு இசையமைக்கிறார் . பொதுவாக நடிகர் விஜய் நடிக்கும் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும் எனவே தமன் இசை மீது அனைவரும் மிகவும் எதிர் பார்ப்புடன் இருக்கின்றனர் . இந்நிலையில் வாரிசு படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை சன் நிறுவனமும் மற்றும் ஓ.டி.டி உரிமத்தை அமேசான் நிறுவனமும் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . தொலைக்காட்சி மற்றும் ஓ.டி.டி உரிமத்தின் மொத்த விலை 167 கோடி என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது . இந்த மதிப்பு விக்ரம் படத்தை விடவும் அதிகமான தொகைக்கு விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus