5 நாட்களில் வசந்த் ரவியின் ‘அஸ்வின்ஸ்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

  • June 28, 2023 / 12:20 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் வசந்த் ரவி. இவர் நடிப்பில் ‘அஸ்வின்ஸ், ஜெயிலர், வெப்பன்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் வசந்த் ரவி ஹீரோவாக நடித்துள்ள ஹாரர் ஜானர் படமான ‘அஸ்வின்ஸ்’ கடந்த ஜூன் 23-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் தருண் தேஜா இயக்கியுள்ளார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் விமலா ராமன், முரளிதரன், சரஸ் மேனன், உதயாதீப் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு விஜய் சித்தார்த் இசையமைத்துள்ளார், ஏ.எம்.எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்துள்ளார், வெங்கட் ராஜன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது, இந்த படம் கடந்த 5 நாட்களில் ரூ.2.35 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus